search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் அரிப்பு"

    ஆத்தூர் அருகே இன்று காலை பலத்த மழை பெய்ததில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேலம் ரெயில் வந்ததால் பொதுமக்கள் துணியை காட்டி நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.

    பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். #SriLankarain #rainswinds
    கொழும்பு:

    தீவுநாடான இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஆறு, ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.பல இடங்களில் மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 72 மணிநேரத்துக்கு தொடர்ந்து 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையிலான கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக அபாயகரமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 1.30 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 231 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்புப்படை ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். #tamilnews #SriLankarain #rainswinds
    ×